Friday, 22 April 2016

பிஃபிக்கர் படத்தில் 23 முத்தக் காட்சிகள்

பாரிசில் நடக்கும் பிஃபிக்கர் படத்தின் சூட்டிங்கில் ஆதித்யா சோப்ரா பிஸியாக இருந்து வருகிறார். இந்த படத்தில் ரன்வீர் சிங்கிற்கும், வாணி கபூருக்கும் 23 முத்தக்காட்சிகள் உள்ளனவாம். பாலிவுட்டில் ஷூத் தேசி படத்திற்கு பிறகு அதிக முத்தக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் தானாம். ஷூத் தேசி படத்தில் 27 முத்தக்காட்சிகள் உள்ளன. தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் பிஃபிக்கர் படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது. இப்படத்திற்கு விஷால் ஷேக்கர் இசையமைத்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

Thursday, 21 April 2016

ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கிய டைரக்டர் கெய் ஹாமில்டன் காலமானார்

மாட்ரிட்: ஜேம்ஸ்பாண்ட் பட இயக்குனர் கெய் ஹாமில்டன்,93 காலமானார். பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஹாமில்டன், பிரிட்டனில் குடியேறினார். பிரிட்டன் திரையுலகில் துணை இயக்குனராக தனது வாழ்க்கை துவக்கி ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். 1980-களில் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர்மூர் நடித்த லைவ் அன்ட் லட் டை, தி மேன் வித் கோல்டன் கன், மற்றும் சீன்கானேரி நடித்த கோல்ட்பிங்கர், டைமன் பார்வர் என 4 படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில

நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார். ஹாமில்டன் மறைவுக்கு மாஜி ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர்மூர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்

நூறாவது நாளை சிறப்பாக கொண்டாடிய சார்லி.

துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் கடந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியான 'சார்லி' படத்தின் 100வது நாள்

கொண்டாட்டம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. மார்ட்டின் பரக்கத் இயக்கியிருந்த இந்தப்படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தின் 100வது நாள் விழாவில் மம்முட்டி, நாசர், இயக்குனர் லால் ஜோஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சார்லி படத்துக்காக சிறந்த ஆர்ட் டைரக்டர் அவார்டு பெற்றிருந்த ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன், 100வது நாள் நினைவு ஷீல்டை வித்தியாசமாக வடிவமைத்து அனைவரையும் ரசிக்க வைத்தார்.
இந்த விழாவின் துவக்கத்தில் இந்தப்படத்தில் நடித்த மறைந்த நடிகை கல்பனாவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. படத்தில் கதாநாயகிகளாக நடித்த பார்வதி மற்றும் அபர்ணா கோபிநாத் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.. இயக்குனரும் நடிகருமான ரெஞ்சி பணிக்கர் தன்னையும் இந்தப்படத்தில் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்டதற்கு பெருமைப்படுவதாக கூறினார்.. விழாவில் பேசிய நாசர் கூடுதலாக நேரம் கேட்டு பெற்று படக்குழுவினரை வாழ்த்தி பேசினார். இந்தப்படத்தில் நாசர் கொஞ்ச நேரமே வரும் ஒரு மேஜிக் மேனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜோக்கர் கதை அல்வா சாப்பிடுவது மாதிரி இருந்தது! - சோமசுந்தரம்



ரண்யகாண்டம், ஜிகர்தண்டா உள்பட சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தவர் சோமசுந்தரம். கூத்துப்பட்டறை நடிகரான இவர், தற்போது ராஜூமுருன் இயக்கியுள்ள ஜோக்கர் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சோமசுந்தரம் கூறுகையில்,
இந்த படத்தில் நான் கமிட்டானதும் பலரும் என்ன அரசியல் படத்தில் நடிக்கிறீர்களோ? என்றனர். அப்போது ஜோக்கர் முழுக்க முழுக்க அரசியல் படமல்ல, காதல் கலந்த அரசியல் படம் என்று கூறினேன். மேலும், ஆரண்யகாண்டம் படத்தைப்பார்த்து விட்டு என்னை வேறொரு கேரக்டருக்காகத்தான் ராஜூமுரு கன் அணுகினார். ஆனால் திருவண்ணாமலைக்கு என்னை காண வந்த அவர், எனது வாழ்க்கை முறை, தோற்றத்தைப்பார்த்த பிறகு ஒரு வாரம் கழித்து என் படத்தில் ஜோக்கராகவே நீங்கள் நடித்து விடுங்கள் என்றார். வேண்டாம் சார் ரிஸ்க் எடுக்காதீங்க என்றேன். இருந்தாலும் அவர் விடவில்லை.


அதன்பிறகு ஸ்கிரிப்ட் படிச்சேன். ஓரளவு நடிப்பு தெரிந்தவர்களுக்கு இந்த ஸ்கிரிப்ட் அல்வா சாப்பிடுவது மாதிரி. இப்படி பண்ணலாம், அப்படி பண்ணலாம் என நிறைய யோசித்தேன். என்றலும், ராஜூமுருகன் ஒரு கண்ட்ரோலில் வைத்துதான் என்னை நடிக்க வைத்தார். அவரை மீறி நான் எதுவும் பண்ணவில்லை. நான் என் நண்பர்களிடம் சொல்வேன், நாடகத்துறை நடிகர்களுக்கு, சினிமாத்துறை டைரக்டர்களுக்கு சினிமான்னா அது டைரக்டர்களுக்குத்தான். அவர்கள் இல்லாமல் நடிகர்கள் பிரதிபலிக்க முடியாது. நடிகர்கள் நடித்த விடலாம் பின்னர் அதை பிரேமுக்குள் கொண்டு வந்து டெக்னிக்கலாக வேலை செய்வது என டைரக்டர்களின் மெனக்கெடல் நிறைய உள்ளது. அதோடு படங்களை தியேட்டர் வரை எடுத்து செல்வது டைரக்டர்கள்தான். அதனால் என்னைப்பொறுத்தவரை சினிமா இயக்குனர்களின் மீடியா.

ராஜூமுருன் இயக்கியுள்ள ஜோக்கர் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சோமசுந்தரம் கூறுகையில்
மேலும். இந்த படத்தை எல்லோரும் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் இது ஒரு வித்தியாசமான படம். டெய்லி நமக்கு மருந்து தேவைப்படாது. ஆனால் நோய்ப்பட்டால் மருந்து தேவைப்படுதில்லையா. அதேசமயம், அந்த மாதிரி இது வெறும் மருந்தாக மட்டுமே இல்லாமல், மூவியாகவும் இருக்கும் என்றார்

கமல் அலுவலகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்.

ரு காலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் மாலா மணியன். பின்னர் தனியார் தொலைக்காட்சியில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். பின்னர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த மாலா மணியன் ஓ காதல் கண்மணி படத்தயாரிப்பில் முக்கிய பங்காற்றினார். நடிகை கௌதமிக்கு மிக நெருங்கிய தோழியாக இருந்தார் இந்நிலையில் கமல்ஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனத்தில் பல மாற்றங்களை செய்தார் கமல். அவரது ஆபிஸ் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள சரியான ஆள் இல்லை என்பதால் மாலா மணியனை ராஜ்கமல் நிறுவனத்தின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டாராம் கௌதமி. அவரது அழைப்பை தட்ட முடியாமல் கமல்ஹாசனின் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார் மாலா மணியன்.


ராஜ்கமல் பட நிறுவனம் இவரது நிர்வாகத்தின் கீழ் வந்த பிறகுதான் கமலுக்கு புதிய பி.ஆர்.ஓ.வை நியமித்துள்ளார். அது மட்டுமல்ல, அலுவலகத்திலும் பல மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறாராம். மாலா மணியனின் நிர்வாகத்திறமையைக் கண்டு கமலே பாராட்டினாராம். மகிழ்ச்சியில் இருக்கிறார் மாலா மணியன். இவரது வருகைக்குப் பிறகு அனேகமாக இயக்குநர் மகிழ்திருமேனிக்கு கமலிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

சாதித்து காட்டிய விஷால்...குவியும் வாழ்த்துக்கள்

நடிகர் சங்க தேர்தலின் போது நாங்கள் வென்றால் நடிகர் சங்க கடன்களை அடைப்போம் என்று வாக்களித்தார்... அவர் கூறியதை போலவே அவர் சங்கத்தின்
கடன்களை அடைத்தார்.
மேலும் அவர் நடிகர் சங்க வங்கி கணக்கில் தற்போது 8 கோடி நிதி உள்ளதாக மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் பலரும் தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் விஷாலுக்கு கூறிய வண்ணம் உள்ளனர்

மணி ரத்னம் படத்தில் நடிக்காதற்கு காரணம் என்ன?? நடிகை சாய் பல்லவி விளக்கம்

மணி ரத்னம் படத்திலிருந்து விலகியது ஏன் என்பதற்கு நடிகை சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.

ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் அடுத்தப் படத்தை இயக்க உடனே தயாரானார். அந்தப் படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை. படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்றும் கடந்த வருடம் தகவல்கள் வெளிவந்தன. பிறகு நடிகர்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதுதான் சிக்கலாகிவிட்டது.

துல்கர் ஒப்பந்தமான இரண்டு மலையாளப் படங்களின் படப்பிடிப்பு சீக்கிரம் முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் அவருக்குப் பதிலாக தெலுங்கு நடிகர் நானியைத் தேர்வு செய்தார் மணி ரத்னம். அதேபோல தேதி பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து நடிகை கீர்த்தி சுரேஷும் விலகினார். கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக வேறொரு கதாநாயகியைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் மணி ரத்னம் படத்தைக் கைவிட முடிவு செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

பிறகு, படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பிரமேம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்த சாய் பல்லவி, கார்த்தியின் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமிழில் ஒரு நல்ல படத்தில் அறிமுகமாகவேண்டும் என்று இருந்த சாய் பல்லவியும் மணி ரத்னம் படம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டார்.

ஆனால் அதன்பிறகு கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் தற்போது அந்தப் படத்திலிருந்து சாய் பல்லவி விலகியுள்ளார். இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

நிறைய வதந்திகள் உலவி வருகின்றன. எனவே நான் தனிப்பட்ட முறையில் அதைத் தெளிவுபடுத்தலாம் என உள்ளேன். யாருக்கும் மணி ரத்னம் படத்திலிருந்து வெளியே வர மனசு இருக்காது. எனக்கும் அப்படிதான். புகழ்பெற்ற இயக்குநரான அவருக்கு ஒரு கதாபாத்திரத்துக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று நன்றாகவே தெரியும். அதேபோல என் மீது அக்கறை உள்ளவராக எனக்கும் எது சரியாக இருக்கும் என்பதும் அவர் நன்றாக அறிவார்.

கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் நல்ல மனதுடன் எனக்குத் தெரிவித்தார். அவருடைய உயரத்துக்கு இதைச் செய்யவேண்டியதில்லைதான். அவருடைய ரசிகராக எல்லோரையும் போல நானும் இந்தப் படத்தில் மிக ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.