ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் நீல் சேத்தி என்கிற இந்திய வம்சாளிச் சிறுவன் நடித்துள்ள படம், தி ஜங்கிள் புக். டிஸ்னி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
கிராபிஸ் படமான தி ஜங்கிள் புக், இந்தியாவில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் வெளியான இந்தப் படம் முதல் வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 75 கோடி வசூலை அள்ளியது. இந்நிலையில் தற்போது ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது. 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றுடன், இப்படத்தின் வசூல் ரூ. 101 கோடி வரை வளர்ந்துள்ளது. இதில் 46% வசூல் ஆங்கிலத்திலும் 54% வசூல் பிற மொழிகளில் வெளியானதிலும் கிடைத்துள்ளது.
இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ. 74.08 கோடி வசூல் செய்தது. இது இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களின் உச்சபட்ச வசூல் சாதனையாகும்.
வீக் எண்ட் எனப்படுகிற படம் வெளியான முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 40.19 கோடி வசூல் செய்தது. இப்போது ரூ. 100 கோடியை எட்டியுள்ளது.
No comments:
Post a Comment