வாயை மூடி பேசவும், காதலில் சொதுப்புவது எப்படி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி மோகன் இவர் கடந்த ஆண்டு நடிகர் தனுஷை வைத்து மாரி என்ற படத்தை இயக்கினார் ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த படம் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது காரணம் படம் முழுக்க தனுஷுக்கு மாஸ் தான். இந்த படத்தில் பெரிய ரவுடி ஆக நடித்திருந்தார். தற்போது அவர் கொடி, தொடரி போன்ற படங்களில் நடித்து வருகிறார் . இந்த படங்களை தொடர்ந்து அவர் மாரி 2ல் நடிக்கபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்க்காக தனுஷ் தயாராக உள்ளதாகவும் கருதப்படுகிறது. இந்த படமும் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment