தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியின் சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிம்பு, கருணாஸிடம் தோல்வியடைந்தார்.
இதையடுத்து நடிகர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
சமீபத்தில் நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்ட நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் தனது சுட்டுரை பக்கத்தில் அவர் புதன்கிழமை பதிந்துள்ள செய்தி:
நான் சிறுவயதில் இருந்தே நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். "பீப்' பாடல் குறித்து பெரிய சர்ச்சை உருவானது. ஆனால், அப்பாடலை நான் வெளியிடவே இல்லை. அது குறித்து எனக்கு பிரச்னை ஏற்பட்டபோது நடிகர் சங்கம் எங்கே போனது?
தற்போது நட்சத்திர கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் அனைத்து முன்னணி நடிகர்களையும் அழைத்து கேவலப்படுத்தி விட்டனர். இப்படி கேவலப்படுத்தும் நடிகர் சங்கத்தில் நாம் ஏன் உறுப்பினராக இருக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆகவே நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு. தனது விலகல் கடிதத்தை வரும் வெள்ளிக்கிழமை நடிகர் சங்க நிர்வாகத்துக்கு அனுப்ப உள்ளதாகவும் அதில் சிம்பு தெரிவித்துள்ளார்.
Wednesday, 20 April 2016
நடிகர் சங்கத்தில் இருந்து விலகினார் சிம்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment