Wednesday, 20 April 2016

மணி ரத்னம் படத்தில் சாய் பல்லவிக்கு பதிலாக அதிதி ராவ்

இந்திய அளவில் பேசப்படும் இயக்குநர்களில் மணிரத்னமும் ஒருவர். இடையில் தொடர்ந்து சில சறுக்கல்களை சந்தித்து வந்த மணிரத்னம் 'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். தற்போது அவர் கார்த்தியை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் கார்த்தி ஜோடியாக பிரேமம் புகழ் சாய் பல்லவி நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் நாம் ஏற்கனவே சொன்னபடி இப்படத்தில் ஒரு ஹிந்தி நடிகை நடிக்கப்போகிறார். ராக்ஸ்டார், மர்டர்3, வசீர், பிட்டூர் போன்ற ஹிந்தி படங்களில் நடித்த அதிதி ராவ் ஹைதாரி, கார்த்தி ஜோடியாக நடிக்க இருக்கிறார். அதிதியின் முதல் தமிழ்படம் இதுவாகும்

No comments:

Post a Comment